My Account Login

திரு சம்பந்தனின் ஒஸ்லோ அறிக்கையை விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நிராகரித்தார்

V. Rudrakumaran

விடுதலைப் புலிகள் சுதந்திர தமிழீழத்தைகோருவதை ஒருபோதும் கைவிடவில்லை

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும், முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே ஒழிய ஒஸ்லோ அறிக்கையின் அடிப்படையில் அல்ல
— விசுவநாதன் ருத்ரகுமாரன்
NEW YORK, UNITED STATES, May 24, 2024 /EINPresswire.com/ --

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) நான்காவதுபாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் மீதான விவாதத்தின் போது, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சம்பந்தன் ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக கூறிய கருத்திற்கு நாடுகடந்
ததமிழீழ அரசாங்கத்தின் (TGTE)பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் மறுதளித்திருந்தார்.

** WATCH:
https://tgte.tv/watch/tgte-parliament-first-sitting-fourth-term-new-york-rudrakumaran_6ZQnw4rS3BSI3ni.html

இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு உள்ளகசுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வு இருக்கும் என்பதுசர்வதேச மட்டத்தில் கடைசியாக ஒப்புக் கொள்ளப்பட்டவிடயம் என்றும், அதற்குப் பொதுத் தமிழ் வேட்பாளர் விடயம் குந்தகம் விளைவிக்கும் என இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ருத்ரகுமாரன், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலானசமாதான நடவடிக்கையில் தான் பங்குபற்றியதால், அந்தக்கூற்றை சரி செய்ய வேண்டிய கடப்பாடு தனக்குஇருப்பதாகத் தெரிவித்தார்.

ருத்ரகுமாரன், உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையில் ஒருகூட்டாட்சி தீர்வை ஏற்படுத்துவதற்கு புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும்ஏற்படவில்லை, மாறாக “தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுதாயகப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின்அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி தீர்வுதொடர்பாக ஆராய்வதற்கு கட்சிகள் ஒப்புக்கொண்டன” (OSLO Communiqué)

ருத்ரகுமாரன் மேலும் கூறியதாவது, பாலா அண்ணா தனது“போரும் அமைதியும்” என்ற புத்தகத்தில் “சமஷ்டி தீர்வைஆராய்தல்” [பக்கம் 403] என்ற தலைப்பின் கீழ், ஒஸ்லோசெய்திக்குறிப்பு பற்றி பேசும்போது, “.... "ஒஸ்லோ பிரகடனம்" என்ற தலைப்பில் ஒரு குறிப்பிட்ட பிரகடனம் இல்லை என்றுகூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சமாதான முயற்சியில்ஈடுபட்ட தரப்பினர் சமஷ்டி தீர்வை ஆராய்வதற்கு மட்டுமேஒப்புக்கொண்டவர்கள் என்ற உண்மையை வலியுறுத்த, பாலாஅண்ணா “ஆராய்வு” [பக்கம் 404] என்ற வார்த்தையைசாய்வாக (Italic) எழுதினார்.

ருத்ரகுமாரன், விடுதலைப் புலிகள் சுதந்திர தமிழீழத்தைகோருவதை ஒருபோதும் கைவிடவில்லை என்றும், உள்ளகசுயநிர்ணயத்தின் அடிப்படையிலான சமஷ்டித் தீர்வைஆராய்வதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டதாகவும்வலியுறுத்தினார்.

ருத்ரகுமாரன் மேலும் கூறுகையில், ஒஸ்லோ அறிக்கையின் பின்னர் பல விடயங்கள் நிகழ்ந்துள்ளன குறிப்பாக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை. ஐ.நாவின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதிக்கட்டத்தின் போது 70,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

எனவே, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும், இன்னுமொரு இனப்படுகொலை நடவாமல் இருப்பதற்காக, முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே ஒழிய ஒஸ்லோ அறிக்கையின் அடிப்படையில் அல்ல” எனக் கூறினார்.

* எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள TGTE பாராளுமன்றம், எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர்கள் தொடர்பில் அதன் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

** WATCH:
https://tgte.tv/watch/tgte-parliament-first-sitting-fourth-term-new-york-rudrakumaran_6ZQnw4rS3BSI3ni.html


https://www.einpresswire.com/article/714212387/mr-sampanthan-s-comment-on-the-oslo-communiqu-is-disputed-by-visuvanathan-rudrakumaran

Visuvanathan Rudrakumaran
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Facebook
Twitter

View full experience

Distribution channels: Human Rights, International Organizations, Media, Advertising & PR, Politics, World & Regional